திங்கள், 19 செப்டம்பர், 2016

58 இன்றைய கோட்டு பிள்ளையார் தரிசனம் : 19-09-2016

58 இன்றைய கோட்டு பிள்ளையார் தரிசனம் : 19-09-2016


கோட்டு பிள்ளையார் எனக்கு பிடித்த பிள்ளையார். நான் குலாலம்பூர் வந்த நாள் முதல் எனக்கு மன ஆறுதலையும் தேறுதலையும் தந்து வாழ்வில் ஒரு புது நம்பிக்கையும் தந்தவர்  இந்த தும்பிக்கையார்.

என்னை போல் இந்த கோட்டு பிள்ளையார் விரும்பிகளுக்காக என்னால் முடிந்த வரை வாரம் ஒருநாள் அன்றைய தரிசனம்  ...


சனி, 6 ஆகஸ்ட், 2016

57: காலை மலரும் வாழும் கலையும்

57: காலை மலரும் வாழும் கலையும்  

அருட் தந்தை திரு வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழும் கலை பற்றி பல முறை கேள்வி பட்டதுண்டு ..இன்று திரு தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் ஒரு அற்புதமான பேச்சை கேட்க நேர்ந்தது. அதில் அவர் வாழும் கலை பற்றி தனக்கேயுரிய நகைச்சுவையுடன் அழகாக எடுத்து பேசிய போது , என்னை மறந்து என் கவலை மறந்து சிரித்துக்கொண்டே எனது வேலைகளை செய்து முடித்தேன் . இது இன்று நேற்று பழக்கம் அல்ல ஒரு இருபதாண்டு கால பழக்கம். 

1991 முதல்  2000ஆம் ஆண்டு வரை , கிட்ட தட்ட ஒன்பது ஆண்டுகள் எனது நாளை செம்மை படுத்தி எனக்குள் ஒரு தேடல் விதையை வித்திட்டவர் திரு தென்கச்சி கோ ஸ்வாமிநாதன் அவர்கள். அவர் ஒரு சகாப்தம். ஒரு   ஐந்து நிமிட வானொலி நிகழிச்சியின் மூலம்  ஒரு மாபெரும் மாற்றத்தை ஒரு  தலைமுறைக்கு அளித்தவர். அந்நாட்களில், ஒரு செய்தியை அறிவதாகட்டும் அல்லது சுயமுன்னேற்ற சிந்தனையை வளர்த்துக்கொள்வதாகட்டும் , இன்றைக்கு இருப்பதை போல இணையம் என்னும் வசதி இல்லை. எங்களை போன்ற தொழில்நுட்பம் கட்டுப்படி ஆகாத எளிமையான குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு பொக்கிஷமாய் விளங்கிய நிகழ்ச்சி "இன்று ஒரு தகவல்" என்றால் மிகை இல்லை.

சென்னை வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசையின் காலை மலர் எனும் நிகழ்ச்சி சரியாக 6:50 மணி செய்திகள் முடிந்து  ஏழு மணிக்கு தொடங்கும். என்ன ஒரு பொருள் பொதிந்த நாற்பது நிமிடங்கள்.,  ஐந்து மணி துளி செய்திகள்  உட்பட ..சரியாய் 7:40க்கு இன்று ஒரு தகவல் தொடங்கும். காலையில் எல்லா வேலைகளும் முடிந்து நானும் என் அம்மாவும் இன்று ஒரு தகவல் முடியும் பொது 7:45க்கு வீட்டை பூட்டுவோம் . இன்று நினைத்தாலும் எப்படி ஒரு ஒழுக்கத்தை இந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்வில் ஏற்படுத்தியது என்று சிந்திக்கும் பொது ஒரு  வியப்பு மேலிடுகிறது .

வாழும் கலை பற்றி வேறு  யாரும் இந்த அளவுக்கு எளிமையாகவும் நகைச்சுவையகவும் சொல்லமுடியாது . இதில் வரும் சில அழகான செய்திகள் நம்மை சிரிப்பதோடு மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் ..

திரு  தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் பேச்சை கேட்டுகொண்டே உணவு சமைத்து, சாப்பிட்டு ..இந்த பதிவையும் முடிக்கும் போது ஒரு உற்சாகம் ஏற்படுகிறது .என்னை கவர்ந்த அந்த ப்பேச்சை உங்களிடமும் பகிர்ந்து 
கொள்கிறேன் ..